இருட்டறையில் கூட்டு பலாத்காரம்..துப்பாக்கியால் சுடப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சிறுமி: உயிர் பிழைத்த அதிசயம்!!

672

1 (11)

3 பேரால் கடத்தப்பட்டு கூட்டுப்பலாத்காரம் செய்து கிணற்றில் வீசப்பட்ட 13 வயது சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்துள்ளார்.நொய்டாவை சேர்ந்த அந்த சிறுமி பல நாட்கள் இருட்டறையில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் துப்பாக்கியால் சுடப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளார்.

இவையெல்லாற்றையும் தாண்டி தற்போது உடல்நலம் தேறி வரும் அந்த சிறுமி தனக்கு நீதி கிடைக்க போராடப்போவதாக தெரிவித்துள்ளார்.கடந்த நவம்பர் 22ம் திகதி, கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த 13 வயது சிறுமி மளிகை கடைக்கு சென்றபோது, வெள்ளை நிற வாகனம் ஒன்றில் வந்த 3 பேர் அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளனர்.

இதையடுத்து அந்த சிறுமியை ஒரு வீட்டில் 2 வாரங்களுக்கு சிறை வைத்துள்ளனர்.பொலிசில் அந்த சிறுமி நடந்தவை பற்றி கூறுகையில், என்னை அடைத்து வைத்த அறை மிகவும் இருட்டாக இருந்தது.மேலும் அவர்கள் எனக்கு சுமார் 4 நாட்கள் உண்ண எதுவும் வழங்காமல் கூட்டு பலாத்காரம் செய்தனர்.பின்னர் ஒரு நாள் என்னை விடுவிக்க முடிவெடுத்த அவர்கள், இரவு நேரத்தில் என்னை காரில் அழைத்து சென்றனர்.

அவர்கள் ஒரு மதுக்கடைக்கு அருகில் காரை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று மது வாங்கி வந்தனர்.அங்கிருந்து கிளம்பிய அவர்கள் காரை அருகில் இருந்த கிணறு ஒன்றின் அருகே நிறுத்தினர்.அப்போது அவர்கள் என்னிடம், ’நீ போகலாம்’ எனக் கூறினர். இதையடுத்து நான் சில அடிகள் எடுத்து வைத்து நடந்த போது, என்னை பின்னாலிருந்து 2 முறை துப்பாக்கியால் சுட்டனர்.துப்பாக்கி குண்டு பாய்ந்ததை உணர்வதற்குள் நான் மயக்கமடைந்து விட்டேன்.

இதையடுத்து அவர்கள் என்னை இழுத்துச் சென்று அருகில் இருந்த கிணற்றில் வீசிவிட்டுச் சென்றுவிட்டனர் என தெரிவித்துள்ளார்.பின்னர், டிசம்பர் 6ம் திகதி காலை, அவரது அழுகுரலை கேட்ட அருகில் இருந்த கிராமத்தினர் கிணற்றில் கிடந்த அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அந்த சிறுமி துப்பாக்கி குண்டுகளால் பெருமளவில் ரத்தத்தை இழந்திருந்த போதிலும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.தற்போது அந்த 3 பேரில் இருவர் கடத்தல், சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கு மற்றும் கொலை முயற்சி ஆகிய வழக்குகளில் கைது செய்துள்ளனர்.

மற்றொரு நபரை கைது செய்ய பொலிசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வடக்கு டெல்லி பொலிசின் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.சிறுமியின் தாயார் பேசுகையில், 5ம் வகுப்பு படித்து வரும் எனது மகள், தனது உடல் நிலை ஒரு மாத்ததில் சீரானதும் மீண்டும் பள்ளி செல்ல ஆசைப்படுகிறாள்.பாதிக்கப்பட்ட அந்த சிறுமி கூறுகையில், என்னை பலாத்காரம் செய்தவர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டும்.மேலும் எனக்கு நேர்ந்த இந்த கொடுமை வேறு யாருக்கும் எப்போதும் நடக்க கூடாது என்று கூறியுள்ளார்.