நாய்களுக்கு வழங்கும் உணவை முதியவர்களுக்கு அனுப்பி வைத்த தொண்டு நிறுவனம்: ஜேர்மனியில் பரபரப்பு!!

706

dog_food_002

ஜேர்மனி நாட்டில் செயல்படும் தொண்டு நிறுவனம் ஒன்று நாய்களுக்கு வழங்கப்படும் உணவுகளை பசியால் வாடிய முதியவர்களுக்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் Osnabrucker Tafel என்ற தொண்டு நிறுவனம் நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் மற்றும் முதியவர்களுக்கு உணவு பொட்டலங்களை இலவசமாக அனுப்பி உதவி புரிந்து வருகிறது.

கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று உணவு தேவை அதிகமாக இருந்ததால், பல ஊழியர்களை நியமித்து உணவு பொட்டலங்களை தேவையான நபர்களுக்கு வீடுதோறும் வழங்கி வந்துள்ளனர்.இந்நிலையில், முதியவர்கள் 3 பேரும் தங்கியிருந்த இல்லத்திற்கு உணவு பொட்டலங்கள் வந்துள்ளது.மகிழ்ச்சியாக அவற்றை பெற்றுக்கொண்டு முதியவர்கள் பொட்டலத்தை பிரித்து உண்ண முயன்றுள்ளனர்.அப்போது, பொட்டலத்திற்கு முன்பகுதியில் ‘இது நாய்கள் உணவு’ என குறிப்பிடப்பட்டு இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொட்டலத்திற்கு பின்பகுதியில் பார்த்தபோது ‘ஒரு நாயின் உருவம் பொறித்து, எவ்வளவு உணவு கொடுக்கலாம்’ என்ற வரையறையும் எழுதப்பட்டிருந்தது.சந்தேகம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, ஒரு உணவு பொட்டலத்தை திறந்து அதில் இருந்த உணவை சமைக்க முயன்றுள்ளனர். அப்போது, அதிலிருந்து வித்தியாசமான வாசம் வந்ததை தொடர்ந்து அது நாய்களுக்கு வழங்கப்படும் உணவு தான் என உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தான் பத்திரிகைகளுக்கு தெரியவந்துள்ளது.முதியவர்களுக்கு நாய்களுக்கு வழங்கப்படும் உணவை எதற்காக அனுப்பி வைத்தீர்கள் என தொண்டு நிறுவனத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளித்த நிர்வாகி ஒருவர் ‘தொண்டு நிறுவனத்திற்கு நாள்தோறும் 5 டன் எடையுள்ள உணவுகள் வருகிறது. இதனை ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக பிரித்து கொடுப்பது மிகவும் சவாலான விடயம்.இவ்வாறு பிரித்து கொடுக்கும்போது தான் தவறுதலாக நாய்களுக்கு வழங்கப்படும் உணவை முதியவர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், ஊழியர்களின் தவறிற்காக மன்னிப்பு கோருவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.