
அமெரிக்காவின் கொலராடா மாகாணத்தில் பிரபல உணவு விடுதி ஒன்று தங்களை சிக்கலில் இருந்து மீள உதவி செய்பவருக்கு இலவச பீட்சா வழங்க முன் வந்துள்ளது.கொலராடா மாகாணத்தில் உள்ள டென்வர் நகரில் பிரபல உணவு விடுதி ஒன்று அப்பகுதி மக்களின் பேராதரவுடன் செயல்பட்டு வந்துள்ளது.
அந்த உணவு விடுதியில் சம்பவத்தன்று திருடன் ஒருவன் பின்புற ஜன்னல் வழியாக விடுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த 2 அலமாரிகளில் வைத்திருந்த சுமார் 65 ஆயிரம் பணத்தை கொள்ளையிட்டு தப்பியுள்ளான்.கொள்ளையனின் இந்த கைவரிசை அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் வீடியோவாக பதிவாகி உள்ளது.இச்சம்பவம குறித்து விடுதி உரிமையாளர் பாட்ரிக் ஒயிட் பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
ஆனால் பொலிசார் தீவிர முயற்சி எடுத்தும் திருடனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து விடுதி உரிமையாளரான பாட்ரிக் ஒரு நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில், உணவு விடுதியில் கொள்ளையடித்த திருடனை கண்டு பிடிக்க பொலிசாருக்கு தகவல் தந்து உதவுபவருக்கு ஓராண்டு முழுவதும் பீட்சா இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.





