
120 கிராம் ஹெரோயினுடன் சிறைச்சாலைக்கு உறவினரைப் பார்க்கச் சென்ற இளைஞரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பிடித்து யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பருத்தித்துறை – மணற்காடு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் நேற்று திங்கட்கிழமை மாலை யாழ். சிறைச்சாலைக்கு தனது உறவினரைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, அவரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பரிசோதனை செய்தனர். இதன்போது, அவரிடம் இருந்து ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் தற்போது யாழ். பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





