இலங்கையை தொழில்நுட்பத்தில் முன்னேற்ற புதிய திட்டம் – பிரதமர்!!

413

1 (28)

இலங்கையை தொழில்நுட்பத்தில் முன்னிலைப்படுத்தும் நோக்கில், புதிய தொழில்நுட்ப நகரத்தை உருவாக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பம்பலபிட்டிய இந்து மகளிர் கல்லூரியில் நேற்று இடம் பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட போதே, இதனை தெரிவித்தார். நவீன தகவல் தொடர்புக் கருவிகளை பயன்படுத்தும் வகையில் மின் நூலகம் அமைக்கவுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.