காதல் திருமணம் பற்றி மனம் திறந்த பிரபல நடிகைகள்!!

473

Shruti-Hassan-Photos-6

நடிகைகள் பலர் காதல் திருமணம் செய்து கொள்வதும், பின் விவாகரத்து செய்து கொள்வதும் நாம் பார்த்து வருகிறோம்.அந்த வகையில் காதல் திருமணம் பற்றி ஸ்ருதிஹாசன், தமன்னா போன்ற நாயகிகள் மனம் திறந்துள்ளனர். தமன்னா கூறியதாவது, காதல், ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நம்பிக்கையில் இருக்கிறது. இருவரும் விட்டுக்கொடுக்கணும் நான் உயர்ந்தவர் நீ தாழ்ந்தவர் என்ற பாகுபாடு பார்க்க கூடாது. எனக்கு இதுவரை காதல் வரவில்லை, அதற்கான நேரமும் இல்லை. எனக்கு பொருத்தமானவரை என் அம்மா, அப்பா யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவரை மணப்பேன் என்றார்.

ஸ்ருதிஹாசன் கூறுகையில், ‘காதல் சந்தோஷமான விஷயம். அது ஒரு தடவைதான் வரவேண்டும். எனவே யாரை காதலிக்கிறோம் என்பது முக்கியம். நான் சினிமாவை உயர்வாக மதிக்கிறேன். திருமணத்துக்கு பிறகும் சினிமாவை விடமாட்டேன். கடைசி வரை நடித்துக்கொண்டே இருப்பேன்.