வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!(படங்கள்)

731

12439048_940051366090893_3509143700060950727_n - Copy

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் வசித்து வந்த இராமச்சந்திரன் ஜெயாளராஜ் என்ற 35 வயதுடைய ஆண் நேற்று(13.01.2015) மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு வவுனியா பொது வைத்தியசாலையில் இவரின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஆச்சிபுரம் பகுதியில் செங்கல்லு உற்பத்தித் தொழிலினை மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் குறித்த நபரின் மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக அவரின் சகோதரி தெரிவித்துள்ளனர்.

திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் மரண விசாரணையினை இன்று மேற்கொண்டதுடன் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

12439048_940051366090893_3509143700060950727_n 12565518_940051446090885_4038210142187470573_n