
அனைத்து சமய நெறி முறைகளின் அடிப்படையில் நடுநிலையான சமூகம் ஒன்றை கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று பொலன்னறுவையில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.எமது நாட்டிற்குள் சிறந்த சமுதாயம் ஒன்றை உருவாக்குவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படும் தன்மை வேண்டும்.
அரசாங்கம் என்ற வகையில் அனைத்து விடயங்களிலும் எடுத்துக்காட்டாகவும், பொறுப்புடனும் இருப்பது அவசியம்
அத்துடன், மிகவும் நற்பண்புடைய, சிறந்த சமூதாய கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி தமது உரையில் தெரிவித்தார்.





