கங்குலியின் அதே போராட்ட குணம்: கோஹ்லியை புகழ்ந்து தள்ளும் சங்கக்காரா!!

243

kholi_sankakara_001

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்கக்காரா, இந்திய டெஸ்ட் தலைவர் கோஹ்லியை கங்குலியுடன் ஒப்பிட்டு பாராட்டியுள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்ற பிறகு இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக கோஹ்லி தெரிவு செய்யப்பட்டார்.

இதன் பிறகு நடந்த இலங்கை, தென் ஆப்பிரிக்கா தொடரை கோஹ்லி தலைமையில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது.இந்த நிலையில் சங்கக்காரா, கோஹ்லியை முன்னாள் இந்திய அணித்தலைவர் கங்குலியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.சங்கக்காரா கூறுகையில், “கோஹ்லி அணித்தலைவராகவும், ஒரு வீரராகவும் போராடும் குணத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.டோனியின் ஓய்வுக்கு பிறகு டெஸ்ட் அணியை சிறந்த முறையில் வழிநடத்தி செல்கிறார்.

கோஹ்லியின் தலைமையில் இந்திய அணியில் நல்ல மாற்றங்களை காண முடிகிறது.முன்னாள் தலைவர் கங்குலி இந்திய அணிக்கு எப்படி போராடி துணை கண்டத்திற்கு வெளியில் வெற்றி பெற வேண்டும் என அதிகமாக கற்றுக் கொடுத்தார்.தற்போதைய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லியிடமும் வெற்றி பெற வேண்டும் என்ற பசியே அதிகமாக காணப்படுகிறது” என்று கூறியுள்ளார்.