
சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட அகதி ஒருவர் சாலையில் நடைப்பயிற்சில் ஈடுப்பட்ட பெண்ணை கடத்தி புதர் மறைவில் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரிச் மாகாணத்தில் உள்ள உஸ்டெர் என்ற நகரில் தான் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று மாலை வேளையில் பெண் ஒருவர் அவருடைய வளர்ப்பு நாய் ஒன்றுடன் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார்.சாலையோரமாக நடந்து சென்றபோது, திடீரென ‘என்னை காப்பாற்றுங்கள்’ என ஒரு புதர் மறைவில் இருந்து கூக்குரல் கேட்டுள்ளது.
சத்தம் வந்த திசையை நோக்கி அவர் வேகமாக ஓடியபோது, புதர் மறைவில் இருந்து வெளிப்பட்ட கருப்பின நபர் ஒருவர் அங்கிருந்து வேகமாக தப்பிச்சென்று விடுகிறார்.அங்கு ஒரு பெண் ஆடைகள் கிழிந்த கோலத்தில் புதரில் இருந்து வெளியே வந்து ‘கற்பழிக்க முயன்ற நபரிடம் காப்பாற்றியதற்காக’ அந்த பெண்ணிடம் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், அதிவேகமாக தேடுதல் வேட்டை நடைபெற்று கருப்பின நபரை அதிரடியாக கைது செய்தனர்.நபரிடம் நடத்திய விசாரணையில் அவரது வயது 28 என்றும், மொரோக்கோ நாட்டை சேர்ந்த அவருக்கு புகலிடம் வழங்க அரசு மறுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
நபரை கைது செய்த சில மணி நேரங்களுக்கு பிறகு, அதே காவல் நிலையத்திற்கு மற்றொரு பெண் வந்து புகார் கூறியுள்ளார்.அதில், ‘இதே பகுதியில் நடைபயிற்சிக்காக சென்றபோது கருப்பின நபர் ஒருவர் தன்னை கற்பழிக்க முயன்றதாக’ குற்றம் சாட்டினர்.
இந்த தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்த பொலிசார், ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நபரை நேரடியாக காட்டியதும் ‘அவர் தான் தன்னை கற்பழிக்க முயன்றதாக’ இரண்டாவது பெண் உறுதிப்படுத்தியுள்ளார்.இரண்டாவதாக பெற்ற புகாரின் அடிப்படையில், இந்த கருப்பின நபரால் பல பெண்கள் பாலின தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகித்துள்ள பொலிசார் அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.





