வவுனியா செட்டிக்குளம் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம்!!(படங்கள்)

525

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கான அபிவிருத்திக்குழு கூட்டமானது நேற்று (13.01.2016) காலை 10.00 மணி தொடக்கம் 02.30 மணி வரை வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழு இணை தலைவரும் பிரதேச செயலக பிரிவுகளின் தலைவருமான கே.கே.மஸ்தான் தலைமையில் செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராசா, எம்.பி.நடராஜா, தியாகராசா, ஜெயத்திலக்க, செட்டிக்குளம் பிரதேச செயலாளர் மற்றும் அரச நிறுவனங்கள் திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இப் பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தில் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் இவ் வருடத்திற்கான திட்டமிடல்கள் பற்றி தெரிவிக்கப்பட்டதோடு கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் சிலவற்றிற்கான முடிவுகளும் தீர்வுகளும் எடுக்கப்பட்டது.

IMG_5454 IMG_5456 IMG_5457 IMG_5460 IMG_5461 IMG_5462 IMG_5467 IMG_5469 IMG_5470 IMG_5471 IMG_5473 IMG_5488 IMG_5509 IMG_5511 IMG_5537 IMG_5541