
2016ம் ஆண்டிற்காக முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் தேசிய நிகழ்வு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசமின் தலைமையில் கோட்டே ஜனாதிபதி வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றது..
ஆண்டொன்றிற்கு முதலாம் தரத்திற்கு 350,000 மாணவர்கள் பாடசாலைகளில் உள்வாங்கப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.





