ஹட்டனில் குழந்தையை கொலை செய்த கொடூர தந்தை சிறையில்!!

444

1 (8)

பத்தனை – குயினஸ்பெரி கீழ்பிரிவில், ஒன்பது மாத குழந்தையை கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட குழந்தையின் தந்தை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவர் இன்றைய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் உடல் நாவலப்பிட்டி மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் காயமடைந்த குழந்தையின் தாய் நுவரெலியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.குழந்தையின் தாய்க்கும், தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலே குறித்த குழந்தையை தந்தை கொலை செய்தமைக்கான காரணம் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.