
பதுரளிய – ஹல்பெதிதொல காட்டு பகுதியில் இருந்து இன்று குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின் போது குறித்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த குழந்தை கடந்த இரு நாட்களுக்குள் பிறந்திருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.





