உலகிலேயே “செல்பி மரணங்கள்” பட்டியலில் No.1 இந்தியா!!

546

selfie_002

செல்பி எடுப்பதால் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தாலும், இளைஞர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது அதன் மோகம்.இந்நிலையில் பிரபல செய்தி நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட், செல்பி எடுப்பதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து உலகம் முழுவதும் ஆய்வு நடத்தியது.

அப்போது 2015ம் ஆண்டில் மட்டும் 27 பேர் செல்பி எடுத்துக் கொள்ளும் போது உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில், பாதி பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.மதுராவிற்கு அருகில் உள்ள கொசிகலாவில் 3 கல்லூரி மாணவர்கள் ஓடும் ரெயிலின் முன் செல்பி எடுத்துக் கொள்ள முயற்சித்த போது பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதேபோல், 7 இளைஞர்கள் தனது நண்பனின் பிறந்தநாளை படகில் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது செல்பி எடுத்துக் கொள்ள முயற்சித்தனர். ஆனால், துரதிருஷ்டவசமாக படகு கவிழ்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.இதேபோல தமிழகத்தின் நாமக்கலை சேர்ந்த இளைஞர் ஒருவரும், ராஜ்கோட்டில் இருவரும் பலியாகியுள்ளனர். இருப்பினும் செல்பி பிரியர்களின் எண்ணிக்கை குறைப்பாடில்லை, இதனை தொடர்ந்து மும்பையில் அபாயகரமான இடங்களில் செல்பி எடுப்பதை பொலிசார் தடை செய்துள்ளனர்.