ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததை கண்டித்து தீக்குளித்த ரமேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.இதனை கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளன, சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் மக்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில் தேனியை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஜல்லிக்கட்டு மீதான தடையை எதிர்த்து நேற்று காலை கம்பம் சாலையில் உள்ள ஒரு திரையரங்கம் முன்பாக தீக்குளித்தார்.இதனையடுத்து படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.