வவுனியா கோவில்குளம் அருளகம் சிறுவர் இல்லத்தின் புதிய கட்டிட தொகுதிக்கான அடிக்கல் நாட்டல்!(படங்கள் )

584

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின் அருளகம்  சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் புலம்பெயர் வாழ்  தமிழ் சமூக சேவையாளர்களின் நிதியுதவியுடன் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (14.01) இடம்பெற்றது.

மேற்படி  நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் கலந்துகொண்டு  கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார் .வன்னிபாராளுமன்ற உறுப்பினர்  சிவமோகன் மற்றும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் அருளகம் சிறுவர் இல்ல சிறுவர் சிறுமியர் ஆகியோர் கலந்து கொண்டனர் .

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் இருந்த சிவிலிய சேனா சிறுவர் இல்லம் மூடப்பட்டு அங்கிருந்த சிறுவர்கள் அருளகம் சிறுவர் இல்லத்துடன் இணைக்கபட்டத்தை தொடர்ந்து சிறுவர் சிறுமியர் தங்குவதற்கு போதிய இட வசதிகள் அற்ற நிலையில்  தமிழர் தைதிருநாள் நிகழ்வில் மேற்படி சிறுவர் இல்லத்துக்கான புதிய கட்டிடத்து க்கான  அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

11979_1022435607817857_398881460879098190_n 12472695_1022435087817909_3468023740325183500_n 12509435_1022434944484590_5445405094286921625_n 12509444_1022435424484542_4120842228962995217_n 12552593_1022435201151231_3305023081967751879_n 12552714_1022434741151277_942112664145405146_n 12573946_1022435924484492_3598611248648116145_n