காதலனுக்காக பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் காதலியாக மாறிய வாலிபர்!!

638

1167491903meera

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த கதக் நடன கலைஞரான கவரவ், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியுள்ளார். கவுரவுக்கும் பாகிஸ்தானை சேர்ந்த நவாஸ் ரிஸ்வான் என்ற வாலிபருக்கும் இடையே சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது.

இதை தொடர்ந்து பாகிஸ்தானை சேர்ந்த நவாஸ் ரிஸ்வானை திருமணம் செய்து கொள்வதற்காக கவுரவ் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியுள்ளார்.

அத்துடன் தனது பெயரையும் மீரா என மாற்றி கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் இதுவரை ஒருவருக்கொருவர் நேரடியாக சந்தித்துக் கொண்டது இல்லை. எனினும் ஸ்கைப் மூலமாக ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டுள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதம் இருவரும் நேரடியாக சந்தித்து கொள்ள உள்ளனர். பெண்ணாக மாறிய கவரவின் இந்த முடிவிற்கு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்த போதும், அவருடைய சகோதரி மிக ஆதரவாக ஒரு தூணாக நின்றதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இவர் இதற்காக 3 அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.