வவுனியாவில் கர்ப்பிணிப்பெண் தீக்காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி!!

823

 
fire

ஏழு மாதமான கர்ப்பிணிப்பெண் எரிகாயங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சூடுவெந்தபுலவு 100 வீட்டுத்திட்டம் பகுதியில் வசித்து வந்த பஸ்மிஸ் பசுமிதா 25 வயது நேற்று முன்தினம் இரவு கடும் பனி காரணமாக குளிராக இருப்பதாக தெரிவித்து விறகுகளை அடுக்கி நெருப்பு வைத்து குளிர் காய்ந்து கொண்டிருந்த சமயம் எதிர்பாராதவிதமாக எற்பட்ட தீ அணிந்திருந்த சில்க் துணியில் பிடித்துள்ளது.

தீயை அணைக்க முற்பட்டபோது அருகில் எரிந்துகொண்டிருந்த விளக்கிலிருந்த மண்ணெண்ணையும் நிலத்தில் சிந்தியதில் தீயின் பரவலைக்கட்டுப்படுத்த முடியவில்லை.

கணவனின் பலமணி நேரம் போராட்டத்தின் பின்னர் உடம்பில் தீ காயத்துடன் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். எனினும் ஏழு மாதமான கர்ப்பிணி என்பதால் சிசுவிற்கு ஆபத்து ஏற்படலாம் என்பதைக்கருதி இன்று மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.