வவுனியா நெளுக்குளத்தில் கொள்ளைச் சம்பவம்..!!

853

வவு­னியா நெளுக்­குளம் பிர­தே­சத்தில் வீடொன்­றுக்குள் நுழைந்து துப்­பாக்­கியைக் காட்டி வீட்­டி­லுள்­ள­வர்­களை அச்­சு­றுத்தி நான்கு இலட்சம் ரூபா­வுக்கு அதி­க­மான பணத்­தையும் தங்க ஆப­ர­ணங்­க­ளையும் கொள்­ளை­யிட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் இரா­ணுவ வீரர் ஒரு­வ­ரையும் மேலும் நால்­வ­ரையும் கடந்த 2ஆம் திகதி கைது செய்­துள்­ள­தாக வவு­னியா பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

கைதான சந்­தே­க ­ந­பர்கள் வவு­னியா மற்றும் கல்­க­முவ பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்கள் எனவும் அவர்­க­ளி­ட­மி­ருந்து ரி 56 ரைபிள் உட்­பட தங்க ஆப­ர­ணங்கள் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

கடந்த மே 6ஆம் திகதி வவு­னியா நெளுக்­குளம் பிர­தேசத்தைச் சேர்ந்த வீடொன்றில் துப்­பாக்­கியைக் காட்டி வீட்­டாரை அச்­சு­றுத்தி பணம் மற்றும் தங்க ஆப­ர­ணங்கள் கொள்­ளை­யிட்­டது தொடர்­பாக மேற்­கொண்ட விசா­ர­ணை­களை அடுத்து இச்­சந்­தே­க­ ந­பர்கள் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட இரா­ணுவ வீரரே இக்­கொள்­ளையை திட்­ட­மிட்டு நடத்தி­யுள்­ள­தா­கவும் இந்த இரா­ணுவ வீரர் வவு­னியா இரா­ணுவ தலை­மை­ய­கத்தில் கட­மை­யாற்றி வரு­வ­தா­கவும் கட­மையின் நிமித்தம் அவருக்கு வழங்கப்­பட்ட துப்­பாக்­கியை இக் கொள்­ளைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.



வவு­னியா குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு கிடைத்த தக­வ­லொன்றையடுத்து மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.