மகளீருக்கான வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க நடவடிக்கை!!

503

WIB

இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் 57வது வருடாந்தர கூட்டம் கடந்த வாரம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் ஈரான் விக்கிரமரட்ன அதிக எண்ணிக்கையிலான மகளீருக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல வகை திறமைகள் மகளீர் வசம் உள்ள போதிலும் அவர்களின் திறமைகள் வெளிப்படுத்தப்படுவதில்லை என குறிப்பிட்டார்.இலங்கையின் உற்பத்தித்துறையில் மகளீரின் சேவையினை அதிக அளவில் பெற நடவடிக்கைகள் எடுக்கும் திட்டம் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும் பிரதி அமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார்.