வீதியை கடக்க முற்பட்டவர் லொறி மோதி பலி!!

522

bigstock-pedestrian-crossing-56377436

ஜா-எல மினுவாங்கொட பிரதான வீதியில் ஜா-எல பகுதியில் நபர் ஒருவர் வீதியை கடக்க முற்பட்ட போது லொறி ஒன்றினால் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்றிரவு 7.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஹேக்கல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளார்.லொறி சாரதி ஜா-எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடை , பேஸ்லைன் வீதியின் மவுன்ட் மேரி பிரதேசத்தில் மஞ்சள் கடவையில் பாதையை கடந்துகொண்டிருந்த தாயும் மகளும் 15 வயதுடைய சிறுவன் செலுத்திய காரில் மோதி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று முன் தினம் இரவு 8.50 மணியளவில் இடம்பெற்று இருந்தமை குறிப்பிடத்கதக்கது.