
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ஆற்றுப் படுகைகளில் லேசர்கதிர் சுவர்கள் அமைக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்திய எல்லையில் 5 கி.மீ. தூரத்தில் உள்ள பாமியால் அருகே உஜ் ஆற்றின் படுகை வழியாக ஊடுருவியது தெரியவந்துள்ளது. எனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ஆற்றுப் படுகைகளில் லேசர்கதிர் சுவர்கள் அமைக்க மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
லேசர்கதிர் சுவர் பகுதியில் ஒருவர் ஊடுருவும் போது பலத்த சத்தத்துடன் ‘சைரன்’ ஒலிக்கும் வகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட உள்ளது.ஊடுருவினால் அதை மிக சுலபமாக கண்டுபிடிக்க முடியும். ஏனெனில் ஊடுருவும் போது பலத்த சத்தத்துடன் ‘சைரன்’ ஒலிக்கும் வகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட உள்ளது.
ஆற்றுப்படுகையில் நிறைந்த எல்லைப்பகுதி பஞ்சாப் மாநிலத்தின்தான் அதிக அளவில் உள்ள நிலையில், அங்கு இதுபோல 40 இடங்கள் உள்ளன.அவற்றில் லேசர்கதிர் சுவர்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும், இதன் மூலம் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க முடியும்.





