மனவளர்ச்சி குறைந்த சிறுவனை குப்பை தொட்டியில் வீசிய மர்மநபர்கள்-உறையவைக்கும் குளிரில் தவித்த பரிதாபம்!!

901

canada_child_002

கனடாவின் மனவளர்ச்சி குறைந்த சிறுவனை அடித்து குப்பை தொட்டியில் வீசியவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவின் வின்னிபிக்(Winnipeg) பகுதியை சேர்ந்தவர்கள் ஜோன் மோரிஸ்ஸிட்டி(John Morrissette) மற்றும் மாரி கென்னர்(Marie Kinnear) தம்பதியினர். இவர்களது மகன் ஜீன் மிட்செல் மோரிஸ்ஸிட்டி மனவளர்ச்சி குன்றியவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்த ஜீனை இரண்டு பேர் வழி மறித்து அடித்துள்ளனர். பின்னர் அருகில் இருந்த குப்பை தொட்டியில் அவனை வீசிவிட்டு தப்பியுள்ளனர். மனவளர்ச்சி குன்றியவரான அவர் வெளியே வரமுடியாமல் தவித்துள்ளார். மைனஸ் 13 டிகிரி குளிரில் உறைந்துபோன ஜீன் தன்னை காப்பாற்றும்படி கூக்குரலிட்டுள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த பெண் ஒருவர் ஆபாய குரல் கேட்டதையடுத்து அப்பகுதியில் தேடியுள்ளார். எனினும் ஜீன் குப்பை தொட்டியில் இருப்பதை அறியாத அவர் அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் சில மணி நேரம் கழித்து வந்த அப்பெண் குப்பை தொட்டியில் பார்த்துள்ளார். உள்ளே ஜீன் இருப்பதை அறிந்த அப்பெண் உடனடியாக அவனை காப்பாற்றியுள்ளார்.

இது தொடர்பாக ஜீன்னின் பெற்றோர் கூறியதாவது, எங்கள் மகனை காப்பாற்றிய அப்பெண்ணுக்கு மிகவும் நன்றி. நல்ல வேளையாக அவனுக்கு எந்த காயமும் இல்லை. எனினும் ஜீனை அடித்து துன்புறுத்தியவர்கள் மீது பொலிஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினர். இதையடுத்து ஜீனை தாக்கியவர்களை பொலிசார் தேடிவருகின்றனர்.