வவுனியா பண்டாரிகுளம் பாடசாலை வீதியில் இருக்கும் புத்தகம் மற்றும் அழகுசாதன விற்பனை நிலையத்தை உடைத்து துணிகரத்திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
நேற்று வியாபார நிலையத்தில் இரவு 9 மணியவரை வியாபார நடவடிக்கையினை மேற்கொண்ட பின்னர் தனது வியாபார நிலையத்தினை மூடிவிட்டுச் சென்றுள்ளார். இன்று காலை தனது வியாபார நிலையத்தினை திறந்துபோது பின்பக்கம் இருக்கும் வாசல் கதவு உடைக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
இத்திருட்டுச் இச்சம்பவத்தில் பணம் 10,00 0ரூபா உட்பட பெறுமதியான பொருட்களும திருடர்களால் களவாடிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டடில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






