கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் உறங்கா விழிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனம் தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இம்மாதம் (2016 ஜனவரி) ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது.
மேற்படி உதவிகள் உயர்கல்வி மற்றும் பாடசாலைக்கல்வி, மருத்துவ சிகிச்சை, வாழ்வாதாரம் போன்ற தேவைகளுக்கான மாதாந்த கொடுப்பனவுகளுக்காகவும் மற்றும் இலவசக் கல்வி நிலைய ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி உதவிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சிபாரிசுகளுக்கு அமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.






