வவுனியா பாலமோட்டையில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை : அச்சத்தில் பொதுமக்கள்!!

569

 
வவுனியா இறம்பைக்குளம் – பாலமோட்டை வீதியில் அமைந்திருந்திருக்கும் புகையிரக்கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றது.

வவுனியா ஒமந்தை சோதனைக் சாவடிக்கு அருகே காணப்படும் இறம்பைக்குளம் – பாலமோட்டை வீதியில் காணப்படும் புகையிரதக் கடவை ஒளிச்சமிக்கை இயங்காத நிலையிலும், பாதுகாப்பு வேலி இல்லாமலும் காணப்படுகின்றது.

மழைக்காலங்களில் தொடர்ச்சியாக புகையிரதக் கடவையின் ஒளிச்சமிக்கை எரிவதனால் .மக்கள் தொடர்ச்சியாக வீதியில் காத்திருக்க வேண்டியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இக் கிராமத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையுடாக மோட்டார் வாகனத்தில் பயணித்த தந்தையும் மகனையும் புகையிரதம் காவு கொண்டது குறிப்பிடத்தக்கது.

இவ் வீதியூடாக பாடசாலை மாணவர்கள், பேரூந்துகள் என பல வாகனங்கள் தினசரி பயணம் செய்கின்றன. சூரிய மின் சக்தியினால் இந்த ஒளிச்சமிக்கை இயங்குவதால். இவ்வாறான அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக மக்கள் தெரிவித்தனர்.

பல கிராமங்களை ஒன்றினைக்கு இவ் வீதியில் பாதுகாப்பான புகையிரதக் கடவையை அமைக்காதது ஏன் என மக்கள் விசனம் தெரிவித்தனர்.

குறிப்பாக கடந்த சில மாதங்களில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையினால் வடக்கில் மாத்திரம் 56 பொதுமக்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.

 

IMG_5692 IMG_5699 IMG_5701 IMG_5702 IMG_5706 IMG_5710 IMG_5732 IMG_5736