எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை மின்சார பாவனையில் தன்னிறைவு – சியம்பலாப்பிட்டிய!!

466

ranjith-siyambalapitiya

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக மின்சார இணைப்புகளுக்காக கோரிக்கை விடுத்துள்ள அனைவரதும், தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.அண்மையில் இந்துரான பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட மின்சக்தி மற்றும் மீள்சுழற்சி சக்திவலு துறை அமைச்சர், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இந்த விடயத்தை தெரிவித்தார்.

“எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கையை மின்சார பாவனையில் தன்னிறைவான நாடாக்குவது எமது நோக்கம்.இந்தநிலையில் நாட்டின் பிரதான உட்கட்டமைப்பு வசதியான மின்சாரத்தை எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்குள் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இதற்காக விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் மின்சார இணைப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளேன்” என்றார்.