அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 25 இளைஞர்கள் பலி?

313

panama_002

பஞ்சாப் மாநிலத்தசை் சேர்ந்த 25 இளைஞர்கள் பனாமா கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்ததிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.கொலம்பியா நாட்டின் துறைமுக நகரமான டர்போ மற்றும் தென் அமெரிக்க நாடானா பனாமாவுக்கு இடையே, பனாமா கால்வாயில் இந்தப் படகு விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவரான ஜலந்தரைச் சேர்ந்த சோனு என்பவர் பஞ்சாப் மாநிலம் கபூர்தாவில் உள்ள இரு குடும்பங்களுக்கு விபத்து குறித்து தகவல் கொடுத்துள்ளார்.20 வயதுடைய வாலிபர்கள் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்து ஜனவரி 10ம் திகதி நடந்ததாகவும் ஆனால் விபத்து பற்றிய தகவல் 3 முதல் 4 நாட்களுக்கு பின்னரே தெரியவந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து அந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் கபூர்தலா பொலிஸில் புகார் கொடுத்துள்ளனர்.

கபூர்தலாவைச் சேர்ந்த சுற்றுலா ஏஜென்டுகள் ஹர்பஜன் சிங், குல்வீந்தர் சிங் முல்தானி ஆகியோர் மூலமாக தங்களது மகன்கள் அமெரிக்காவுக்கு பயணப்பட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.இதுகுறித்து விசாரிப்பதற்காகவும் அந்த இளைஞர்களின் நிலைகுறித்து அறியவும் பஞ்சாப் அரசு ஒரு குழுவை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது.

மேலும் இதுதொடர்பாக பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளது.ஒவ்வொவரும் குறைந்தது ரூ. 10 லட்சம், அதிகபட்சம் ரூ. 25 லட்சம் கொடுத்து இந்த சட்டவிரோத கும்பலால் அமெரிக்காவுக்கு படகு மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.கபூர்தலா எஸ்.பி. ராஜீந்தர் சிங் கூறுகையில், அந்த இரு ஏஜென்டுகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்து விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.