பள்ளத்தில் விழுந்து உருண்ட லொறி: ஓட்டுனர் மீது ஏறியதால் பரிதாப பலி!!

266

driver_dead_002

சுவிட்சர்லாந்து நாட்டில் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் லொறி ஒன்று விழுந்து உருண்டோடிய விபத்தில் அதன் ஓட்டுனர் லொறிக்கு அடியில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் Obwalden மாகாணம் பல சிறிய கிராமங்களை கொண்டது. இங்குள்ள குபேர் என்ற கிராமத்தில் கருங்கற்களை உடைத்து சிறிய கற்களாக மாற்றும் குவாரி ஒன்று இயங்கி வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை இந்த கிராமத்தில் இருந்து லொறி ஒன்று Alpnach கிராமத்தை நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த லொறியை 25 வயதான வாலிபர் ஒருவர் ஓட்டிச்சென்றுள்ளார்.சில மணி நேரப்பயணத்திற்கு பிறகு, சாலையில் உள்ள ஒரு வளைவில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த லொறி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து பல முறை உருண்டுள்ளது.

லொறி உருளும்போது உள்ளே இருந்த ஓட்டனர் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வீசப்பட்டுள்ளார்.அப்போது உருண்டு சென்ற லொறி அந்த ஓட்டுனர் மீது ஏறி இறங்கியதில், அந்த வாலிபர் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார்.சம்பவம் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் லொறியும் படுமோசமாக சேதம் அடைந்துள்ளது.லொறி பயணித்த சாலை முழுவதும் பனி படர்ந்து காணப்பட்டதால், இதனால் லொறி சறுக்கலுக்கு உட்பட்டு இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.