முகத்திரை அணிந்த இஸ்லாமிய பெண்ணை வெளியே வீசிய வங்கி ஊழியர்: ஜேர்மனியில் பரபரப்பு!!

260

hijab_ban_002

ஜேர்மனி நாட்டில் முகத்திரை அணிந்திருந்த இளம் இஸ்லாமிய பெண் ஒருவரை வங்கிக்குள் அனுமதிக்காமல் வெளியே தள்ளிவிட்டு கதவினை மூடிய வங்கி ஊழியரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஜேர்மனியில் உள்ள Neuss நகரில் Sparkasse என்ற தனியார் வங்கி இயங்கி வருகிறது.

இந்த வங்கிக்கு கடந்த புதன்கிழமை அன்று பணப்பரிமாற்றம் செய்வதற்காக 20 வயதான இஸ்லாமிய பெண் ஒருவர் வந்துள்ளார்.வங்கிக்குள் நுழையும்போது அந்த பெண், கண்கள் மட்டும் வெளியே தெரியும் வகையில் முகத்திரை அணிந்திருந்ததை பார்த்த வங்கி ஊழியர் ஒருவர் விரைந்து வந்து அந்த பெண்ணை வழிமறித்துள்ளார்.

’’நீங்கள் முகத்திரை அணிந்திருப்பதால், உள்ளே அனுமதிக்க முடியாது. உடனடியாக வெளியேறுங்கள்’ என கூறியுள்ளார்.‘அவசரமான வங்கி வேலை இருக்கிறது. தயவுசெய்து என்னை அனுமதியுங்கள்’ என அந்த பெண் கெஞ்சியுள்ளார்.ஆனால், அந்த ஊழியர் அனுமதிக்காத காரணத்தினால் ‘சரி, என்னுடைய முகத்திரையை விலக்கி என் முகத்தை முழுவதுமாக காட்டுகிறேன். அப்போதாவது என்னை அனுமதியுங்கள்’ என கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையிலும் அந்த ஊழியர் மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஊழியர் அந்த பெண்ணை பிடித்து வெளியே தள்ளிவிட்டு கதவினை மூடியுள்ளார்.பெரும் அவமானம் அடைந்த அந்த பெண் அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்ற பொலிசார் உடனடியாக வங்கியை தொடர்புக்கொண்டு விசாரணை செய்தபோது, வங்கி மேலாளார் பேசியுள்ளார்.‘முகத்திரை அணிந்துள்ள பெண்ணை தனியாக அழைத்துச்சென்று பரிசோதனை செய்வது என்பது எங்கள் வங்கியின் நடைமுறை அல்ல.பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி தான் அந்த பெண்ணை உள்ளே அனுமதிக்கவில்லை’ என பதில் அளித்துள்ளார்.எனினும், வங்கியில் நடந்த இந்த அவமதிப்பிற்காக அந்த இஸ்லாமிய பெண்ணின் கணவர் வழக்கு தொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.