
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் அசின். இவருக்கும் மைக்ரோமக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவுக்கும் திருமணம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இவருக்கும், ராகுல் ஷர்மாவிற்கும் இன்று டெல்லியில் திருமணம் நடைபெற்றது. காலை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது, அதைத் தொடர்ந்து மாலையே இந்து முறைப்படி தசித் தேவரானா ஹோட்டலில் திருமணம் நடைபெறவுள்ளது.
இன்று நடைபெறும் திருமணத்தில் பிரபல நடிகர் மற்றும் அசினின் நெருங்கிய நண்பரான அக்ஷய்குமார் கலந்து கொள்ள இருக்கிறார்.
ஜனவரி 23ம் திகஹ்டி மும்பையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.





