உயிரிழந்த நிலையில் யானை மீட்பு!!

495

1911741670Ele

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக யானைகள் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடிசுவாமிமலை பகுதியில் காயங்களுடன் இறந்த நிலையில் யானை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கச்சக்கொடிசுவாமிமலை பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதியை அண்டிய பகுதியில் இருந்தே இந்த யானையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆண் யானையின் மரணம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த இரு மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. குறிப்பாக காட்டுயானை தாக்குதல்கள் அதிகம் உள்ள பகுதிகளிலேயே இவ்வாறு யானைகள் இறக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.