
மதுபானம் மற்றும் சிகரட் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி வருமானத்தை பொருட்படுத்தாமல், இந்த பேரழிவில் இருந்து மக்களை பாதுக்காக்கும் நோக்கத்துடன் செயற்படள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.போதை பொருள் தடுப்பு தேசிய திட்டத்தின், கொழும்பு மாவட்டத்திற்கான இறுதி நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
‘போதை பொருள் அற்ற நாடு’ என்ற தலைப்பின் கீழ் கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்திய நிகழ்வுகளின், இறுதி நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மஹரகம தேசிய இளைஞர் மன்றத்தில் இடம் பெற்றது.அங்கு கூடியிருந்த தரப்பினருடன், ஜனாதிபதியும் இணைந்து போதை பொருள் பழக்கத்ததை தடுப்பதற்கான உறுதிமொழியளித்தார்.இந்த நாட்டில் மதுபானம் மற்றும் சிகரட் நுகர்வு செலவு, தேசிய வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேற்பட்டது என ஜனாதிபதி, இதன் போது சுட்டிக்காட்டினார்.





