காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை!!

667

south_kashmir_002
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையின் போது, தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் தற்போது துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.இதனிடையே, தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை ஹரித்துவாரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.