இரண்டாயிரம் ரூபாவுக்காக மகனை கொலை செய்த தந்தை!!

535

murder

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த ஒருவர் தனது மகனை சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார். குறித்த நபர் சொந்த கிராமத்திற்குச் செல்வதற்காக (வைஷாலி மாவட்டம், பீகார்) கடந்த 10-ம் திதி தனது மகனிடம் இரண்டாயிரம் ரூபாய் கேட்டுள்ளார்.

தன்னிடம் பணம் இல்லை என்று கூறி அவரது மகன் மறுப்பு தெரிவித்ததனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையேயான சண்டை தீவிரமடையவே வீட்டில் இருந்த சுத்தியலால் மகனின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் (17) பலியானார். சம்பவத்தின் பின்னர் குறித்த தந்தை தலைமறைசாகியுள்ளார். இதையடுத்து நாசிக் பொலிசார் கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியுள்ள சம்சுலை தீவிரமாக தேடி வருகின்றனர்.