90 வயது தோற்றத்துடன் வாழும் 15 வயது கொலம்பியா பெண்!!

291

colombian_teen_surpass_007

கொலம்பியாவில் வயதுக்கு மீறிய தோற்றத்துடன் வாழும் பெண் ஒருவர் மருத்துவர்களின் கணிப்பை பொய்யாக்கியுள்ளார். உலக அளவில் ஒருசிலருக்கே ஏற்படும் வயதுக்கு மீறிய தோற்றத்தை அளிக்கும் Progeria Syndrome நோயால் Magali Gonzalez என்பவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு மருத்துவ உதவிகள் அளித்துவரும் மருத்துவர்கள் 13 ஆண்டுகள் மட்டுமே இவரால் இந்த நோயுடன் உயிர் வாழ முடியும் என கணித்திருந்தனர்.மருத்துவர்களின் அந்த கணிப்பை பொய்யாக்கி Magali Gonzalez தனது 15வது பிறந்த நாளை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

தனது 15வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என பெற்றோரிடம் அவர் கேட்டுக்கொண்டதால் விழாவினை நடன நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.90 வயதுடையவர்கள் போன்று வாழ்ந்துவரும் Magali எப்போது வேண்டுமானாலும் உயிரிழக்கலாம் என அவரது பெற்றோர் அறிந்து வைத்துள்ளனர்.

பிரித்தானியா மருத்துவர்கள் இருவரால் முதன்முறையாக உலகிற்கு விளக்கமளிக்கப்பட்ட இந்த நோய், அந்த மருத்துவர்களின் பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது.இந்த முதிர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருதயம் சம்பந்தப்பட்ட கோளாறினால் 13 அல்லது 14 ஆண்டுகளில் உயிரிழப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.