வேலை வேண்டாம் என நீதிபதியிடம் கெஞ்சிய பிச்சைக்காரன்!!

322

homeless-man-hand-some-change-dirty-beggar-concept-white-background-42506202

பிரித்தானிய நாட்டில் அலுவலக வேலையில் கிடைக்கும் வருமானத்தை விட பிச்சை எடுப்பதில் அதிக வருமானம் கிடைப்பதால் தான் வேலைக்கு செல்ல மாட்டேன் என பிச்சைக்காரர் ஒரு நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.இங்கிலாந்தில் உள்ள ழேவவiபொயஅ நகரில் ஊசயபை யுவமiளெழn (36) என்ற வீடு இல்லாத நபர் அங்குள்ளவர்களிடம் பிச்சை எடுத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

ஆனால், இந்த பகுதியில் பிச்சை எடுப்பது பெரும் பிரச்சனையை கிளப்பியுள்ளதால், நகர நிர்வாகம் பிச்சை எடுப்பவர்களை கைது செய்து வந்துள்ளது.இந்நிலையில், பொதுமக்களிடம் பிச்சை எடுத்த கிரெய்க்கை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர்.இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது ‘பிச்சை எடுக்கும் தொழிலை விடுத்து வேறு பணிக்கு செல்லுமாறு’ நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால், இதனை மறுத்த அந்த பிச்சைக்காரர் ‘மற்ற பணிகளில் கிடைக்கும் வருமானத்தை விட பிச்சை எடுப்பதில் எனக்கு அதிக வருமானம் கிடைக்கிறது.மற்ற பணிகளில் வரும் 200 பவுண்ட் வருமானத்தை அவர்கள் போதை மருந்துக்களுக்காக தவறாக பயன்படுத்துகின்றனர்.ஆனால், எனக்கு வரும் இதே வருமானத்தை எனது இரண்டு குழந்தைகளை வளர்க்க பயன்படுத்துகின்றேன்.மற்ற பணிக்கு சென்றால், எனக்கு இந்த வருமானமும் கிடைக்காது’ என விளக்கம் கொடுத்துள்ளார்.

எனினும், பிச்சை எடுப்பது தவறு என்பதால் அரசுக்கு 15 பவுண்ட் அபராதம் செலுத்த வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.இதற்கு பதிலளித்த பிச்சைக்காரர், ‘இந்த அபராதத்தை செலுத்த தயார். ஆனால், என்னை மற்ற வேலையில் சேர வேண்டும் என வலியுறுத்தாதீர்கள்’ என கேட்டுக்கொண்டார்.எனினும், ’நீதிமன்றத்தில் நடந்த வழக்கு செலவினங்களுக்காக கூடுதலாக 85 பவுண்ட் செலுத்த வேண்டும்’ என நீதிபதி தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பிச்சைக்காரர், ‘இதனை நான் செலுத்த முடியாது. என்னை சிறையிலேயே அடைத்து விடுங்கள்’ என நீதிபதியிடும் கேட்டுக்கொண்டுள்ளார்.நகரை சுற்றிலும் பிச்சைக்காரர்கள் அதிகரித்துள்ளதால், அவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.