சூப்பர் ஸ்டாரை திடீரென்று சந்தித்த பிரபல இசையமைப்பாளர்!!

236

rajinikanth_gv_prakash001

திரிஷா இல்லைனா நயன்தாரா படத்தை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ், சேம் ஆண்டன் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற தலைப்பை முடிவு செய்துள்ளனர். இந்த வசனம் பாட்ஷா படத்தில் ரஜினி கூறியிருப்பார்.

எனவே இந்த டைட்டிலை முதலில் ரஜினி அவர்களிடம் கூற வேண்டும் என்று விருப்பப்பட்டு அவரை சந்தித்தாராம் ஜி.வி. பிரகாஷ்.இதுபற்றி ஜி.வி. பிரகாஷ் கூறுகையில், என் பட தலைப்பை அவரிடம் முதலில் கூற நினைத்தேன். ரஜினி அவர்களும் இதை கேட்டு சந்தோஷப்பட்டார். திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தில் என் நடனத்துக்கு பாராட்டு தெரிவித்தார் என்றார்.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடவுள்ளார்.