
கொழும்பு – பித்தளை சந்தியில் இருந்து தேர்ஸ்டன் சந்தி வரையிலான ப்ளவர் வீதியில், இன்று முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் அமரசிறி சேனாரத்ன இதனை தெரிவித்தார்.வார நட்களில் மாலை 4.30 தொடக்கம் 6.30 வரையில் இந்த வீதி ஒழுங்கு கடைப்பிடிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.





