விபசார விடுதி சுற்றிவளைப்பு – 3 சீன யுவதிகள் கைது!!

468

COPERTA1

கொள்ளுப்பிட்டி – பாடசாலை ஒழுங்கையில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றை பொலிஸார் சுற்றி வளைத்ததில் 3 சீன யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே பொலிஸார் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சீன யுவதிகளை இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.