
அமெரிக்கா நாட்டை சேர்ந்த கோடீஸ்வர தம்பதி இருவர் சிறிய ரக விமானத்தில் பயணம் செய்தபோது நடுவானில் ஏற்பட்ட திடீர் விபத்தால் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அரிசோனா மாகாணத்தை சேர்ந்த டொனால்ட் பேகர் (59) என்பவர் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஆவர். இதே மாகாணத்தில் மட்டும் இவருக்கு 2.5 மில்லியன் சதுர பரபரப்பளவில் சொத்துக்கள் உள்ளன.
டொனால்ட் கடந்த 2012ம் ஆண்டு ஆபரண நகை தயாரிப்பாளரான டான் ஹண்டர் (55) என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.இந்நிலையில், நேற்று உட்டாஹ் மாகாணத்தில் ஒரு அலுவலக வேலையை முடித்துக்கொண்டு இருவரும் சிறிய ரக விமானத்தில் அரிசோனா திரும்பியுள்ளனர்.விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், விமானத்தில் இருந்த இரண்டு என்ஜின்களில் ஒன்றில் இருந்து திடீரென நெருப்பு வெளியாகியுள்ளது.இதனைக்கண்ட டொனால்ட் உடனடியாக விமானத்தை உட்டாஹ் நகருக்கு திருப்பியுள்ளார்.ஆனால், துரதிஷ்டவசமாக விமான என்ஜின் வெடித்ததில் விமானம் தீப்பற்றி எரிந்தவாறு Cedar Fort என்ற பகுதியில் விழுந்துள்ளது.
சம்பவம் அறிந்து வந்த மீட்பு படையினர், உயிரிழந்தது டொனால்ட் மற்றும் அவரது மனைவி தான் என உறுதிப்படுத்தினர்.விபத்தில் சேதமான பாகங்களை சேகரித்துள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள் விபத்து எவ்வாறு நிகழ்ந்தது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.





