இன்று காலை கடத்தப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்டார் : கடத்தல்காரர்களும் கைது!!

601

kidnap

யாழ்ப்பாணம், வரணி – இயற்றாலை பிரதேசத்தில் வைத்து பெண் கிராம சேவையாளரைக் கடத்திய நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 9.00 மணியளவில் குறித்த கிராம சேவையாளர் தனது அலுவலகத்துக்கு சென்று கொண்டிருக்கையில் இயற்றாலை பிரதேசத்தில் வைத்து வேன் ஒன்றில் வந்த குழுவினரால் கடத்தப்பட்டிருந்தார்.

அதனையடுத்து காலை 11.00 மணியளவில் முல்லைத்தீவு -புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வைத்து குறித்த குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களை புதுக்குடியிருப்புப் பொஸிஸார் விசாரணையின் பின்னர் கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடத்தப்பட்ட பெண் கிராம சேவையாளர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.