மனைவி கருவுற்றிருக்கும்போது, அவளது கணவன் செய்யக்கூடாத சில செயல்கள்!

957


pregnant_1640709f

இளைஞன் பிரம்ம‍ச்சாரியாக இருக்கும்வரை அவன் யாருக்கும் கட்டுப்படமாட்டான். சுதந்திர பறவையாகவானில் சிறகடித்து பறந்து கொண்டிருப்பான். இதே அவனுக்கு திருமணம் ஆகி மனைவி என்று ஒருத்தி வந்துவிட்டால், அவ்வ‍ளவுதான் எங்கிருந்துதான் அவனுக்கு பொறுப்புக்கள் வருமோ தெரியாது. காண்பவர் வியக்கும் வண்ண‍ம், அந்த ஆடவன் மிகவும் பொறுப்புடன் குடும்பத்தை கவனித்துக் கொள்வான்.அதே தன் மனைவி, கருவுற்று, தனது வாரிசை சுமக்கிறாள் என்று தெரிந்ததும்  அவளது கணவனான அந்த ஆண்மகன் செய்யக்கூடாது சில அவச்செயல்களை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

1) நண்பர்களோ உறவினர்களோ இறந்துவிட்டால் அவர்களின் சவ ஊர்வலத்தில் பங்கேற்று பின் தொடரக்கூடாது.2) மனைவியை தனியே விட்டு மலையில் ஏறுவதோ அல்ல‍து தூர தேசத்திற்கு பயணம் மேற்கொள்ள‍வோ கூடாது3) கடலில் நீந்தியோ அல்ல‍து மூழ்கியோ குளிக்கக் கூடாது.
4) வீடு கட்டக்கூடாது,


5) வீட்டில் திருமணம் செய்யக்கூடாது

6) க‌ணவன் எக்காரணம் கொண்டும் மொட்டை அடிக்க‍க் கூடாது.


7) எந்தவிதத்திலும் தனது மனைவியை அவ்வாடவன் அடித்து துன்புறுத்தி அவளது உடலை காயப்படுத்த‍வோ அல்ல‍து அசிங்கமான வார்த்தைகளை கூறி அவளது மனதை ஊனப்படுத்த‍வோ கூடாது.

8) சிகரெட் புகைக்கவோ, மது அருந்தவோ கூடாது

இந்த 8 குறிப்புக்களை மனைவி கர்ப்பிணியாய் இரு க்கும்போது அவளது கணவன், ஒழுங்காக கடை ப்பிடிக்க‍வேண்டும்.அப்பொழுதுதான் ஆரோக்கிய மான அழகானகுழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்கும்