
குருநாகல் – யடிவெகரவத்த பிரதேசத்தில் வீட்டு பாதுகாப்பு அதிகாரி ஒருவர், கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு 10.00 மணி அளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கத்தி குத்துக்கு இலக்கான நபர்,கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.யடிவெகரவத்த பிரதேசத்தினை சேர்ந்த நபர் ஒருவரினாலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த நபர், தாக்கிய பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.





