150 தொழிற்சாலைகள் மூடல் – அரசு அதிரடி!!

536

closed-sign

இந்தியாவின் பாரம்பரிய நதிகளில் முக்கியமான கங்கை நதி மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் அந்த நதிக்கரையில் இருந்த 150 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக 5 ஆண்டுகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இந்தியாவுக்கு உதவ ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ஆர்வம் காட்டியுள்ளன.

இந்நிலையில், கங்கை மாசடைவதைத் தடுக்க தங்கள் அமைச்சகம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறுகையில், “கங்கை நதிக்கரையில் உள்ள தொழிற்சாலைகள் கழிவுகளை வெளியேற்றுவதில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்து மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் செயல்திட்டம் வகுத்தது.

இதனை முழுமையாக கடைப்பிடிக்காத 150 தொழிற்சாலைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அவற்றில் 28 ஜவுளி ஆலைகள், 9 சர்க்கரை மற்றும் காகித ஆலைகள், 6 இறைச்சிக் கூடங்கள், 10 ரசாயன ஆலைகள், 68 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளிட்டவை அடங்கும். கங்கை நதிக்கரையில் மட்டுமல்லாது நாடு முழுவதுமே மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை மீறிய பல்வேறு தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.