கடும் குளிரில் சிக்கிய தாய் மற்றும் 4 வயது குழந்தை: போராடி காப்பாற்றிய இளம்பெண்!!

504

women_rescues_mom_002

கனடாவின் Manitoba மாகாணத்தில் கடும் குளிரில் சிக்கிய தாய் மற்றும் அவரது 4 வயது குழந்தையை இளம்பெண் ஒருவர் போராடி காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் Manitoba மாகாணத்தில் குடியிருந்து வரும் Tina Dubyts எனும் இளம்பெண் ஒருவர் பணிக்கு செல்லும் பொருட்டு தனது வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

பனி மூட்டம் நிறைந்த காலை நேரமானதால் தனது வாகனத்தை சிரத்தையுடன் செலுத்தி வந்தவருக்கு Dunrea பகுதியில் சாலையின் ஓரத்தில் கார் ஒன்று கவிழ்ந்து கிடப்பதை கண்டுள்ளார்.மேலும் சாலையில் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்டிருந்த கம்பியமைப்பில் பிடித்து பெண் ஒருவர் வெளியே வர முயன்று வருவதையும் பார்த்துள்ளார்.

இதனையடுத்து அப்பகுதிக்கு தனது வாகனத்தை செலுத்திய Tina அங்கு வாகன விபத்தில் சிக்கிய தாய் மற்றும் 4 வயது குழந்தை ஒன்றையும் மீட்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.விபத்துக்குள்ளான வாகனத்தில் மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை மீட்க உடனடியாக மருத்துவக்குழுவினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்துள்ளார்.Dunrea பகுதியில் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த 26 வயது Kristen Hiebert என்பவர் அவரது 4 வயது குழந்தையுடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அவரது வாகனம் பனிப்பகுதியில் சிக்கி சாலையில் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

ஆனால் அப்பகுதியில் வாகனத்தில் சென்ற எவரும் கண்டு கொள்ளாமல் சென்றதால் அந்த கடும் குளிரில் 12 மணி நேரம் போராடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.இதனிடையே பொலிசாரும் மீட்பு குழுவினரும் வந்து விபத்துக்குள்ளான பெண்மணியை மீட்டு மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர்.