ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா? இதோ 6 பழக்கவழக்கங்கள்!!

304


Girls___Models___Happy_girl_053454_

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமென்று ஒவ்வொருவரும் ஆசைப்படுவார்கள்.அதில், நீங்களும் ஒருவராக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள 6 பழக்கவழக்கங்களை கடைபிடியுங்கள்,தியானம்: நம் உடல் மற்றும் மனதை மேம்படுத்தும் தியானத்தை அன்றாடம் செய்யுங்கள், தியானம் ஒன்றுதான் பக்க விளைவுகள் இல்லாத இயற்கையாக மனம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து வெளியே வர ஒரே வழி.தியானம் தொடர்ந்து செய்யும்போது மனது ஆனது சரியான வழியில் செல்லும். சரியாக முடிவு எடுக்க சொல்லும். மனது சரியான வழியில் சென்று கொண்டு இருக்கும்போது நல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் தியானம் வழி வகுக்கிறது.

மனதை லேசாக்குங்கள்: மனதை பொறுத்துதான் நோய்களின் வீரியம் குறைந்தும், அதிகரிக்கவும் செய்கிறது, மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் நோயிலிருந்து எளிதில் விடுபடலாம், மனம் ஆரோக்கியம் பெற அமைதியான சூழல், அளவான ஆழ்ந்த தூக்கம் அவசியம்.உணவு: ஆரோக்கியமான உணவை சாப்பிட்டாலும், அவற்றினை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது கூடாது, தரையில் அமர்ந்து சாப்பிட்டால் அனைத்து சத்துக்களும் நமக்கு நல்ல பலனைத் தரும்.சாப்பிடும்போது கறிவேப்பிலை, வெங்காயம் போன்றவற்றை தூக்கி எரியாதீர்கள், ஏனெனில் சமையலில் சேர்க்கப்படும் அனைத்து பொருட்களும் சத்துக்கள் அடங்கியவைதான் என்பதை கருத்தில் கொள்க.உங்களையே நேசிக்க தொடங்குங்கள் : மற்றவர்களை நேசிக்கும் நீங்கள், உங்களையும் மிகவும் நேசிக்க பழகுங்கள், மன அழுத்தம், மனச்சோர்வுக்கான தீர்வு பிறரிடம் கிடைப்பதில்லை, உங்களிடமே கிடைக்கிறது, எனவே உங்களையே நேசிக்க ஆரம்பித்தால், உங்களுக்கு தேவையானவற்றில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவீர்கள்.


உடலுழைப்பு: என்னதான் கணனி முன அமர்ந்து வேலை பார்த்தாலும், உடலுழைப்பு என்பது மனிதனுக்கு முக்கியமான ஒன்றாகும்.பணி முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர் சாப்பிட்டுவிட்டு தூங்காமல், உடற்பயிற்சி செய்வது, அருகில் உள்ள கடைக்கு செல்வது, வீட்டை சுத்தம் செய்து என உடலுக்கு கொஞ்சம் வேலை கொடுங்கள்.

சீரான உணவு பழக்கம்: நீங்கள் உட்கொள்ளும் உணவு சீரான முறையில் இருத்தல் வேண்டும், காலை உணவை தவிர்க்ககூடாது, இரவில் துரித உணவுகளை சாப்பிடக்கூடாது, சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளக்கூடாது.உணவுகளை அளவாக உட்கொள்வது, மது வகைகளை தவிர்த்தல், அன்றாடம் இரண்டு வகை காய்களை உணவில் சேர்த்தல், பழங்கள் சாப்பிட வேண்டும்.