நிமிடத்திற்கு ஒரு லொறி குப்பை…கடலில் மீன்களே இருக்காது! அதிர்ச்சி தகவல்!!

332

plastic_sea_002

2050ம் ஆண்டில் கடலில் மீன்களே இருக்காது, பிளாஸ்டிக் குப்பைகள் தான் நிறைந்து இருக்கும் என உலகப் பொருளாதார பேரவை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக உலகப் பொருளாதார பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 8 மில்லியன் டன் அளவுள்ள குப்பை கடலில் கொட்டப்பட்டு வருகின்றது.

அதாவது நிமிடத்திற்கு ஒரு லொறி குப்பை கொட்டப்படுகிறது, இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.கடந்த 2014ம் ஆண்டில் 311 மில்லியன் டன் குப்பை கொட்டப்பட்ட நிலையில், 2050ம் ஆண்டில் நான்கு மடங்காக உயர வாய்ப்புள்ளது.அக்கால கட்டங்களில் கடலில் மீன்களுக்கு பதிலாக குப்பைகளே நிறைந்திருக்கும்.

பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது, 95 சதவிகிதம் பெரும்பாலும் எரிக்கப்படுகிறது.ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளது, அதுமட்டுமின்றி இதிலுள்ள ரசாயனங்களால் கடலிலுள்ள மீன்களும் வெகுவாக பாதிப்படைகின்றன.எனவே உடனடியாக நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.