கொழும்பு – வவுனியா ரயில் ஆர்ப்பாட்டக்காரர்களால் இடைநிறுத்தம்..!

1


கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயில் குருநாகல், கிரியால பிரசேத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கிரியால பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தை வழிமறித்து ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருவதன் காரணமாக இந்த ரயில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.


இன்று காலை 6.50 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்தை ஆரம்பித்த இன்டர்சிற்றி கடுகதி ரயிலே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.